ஆண்

1 comments

ஆயுதம் ஏந்தா
அறநெறி நடத்தும் அரசாட்சி!!
அன்று முதல் இன்று வரை
தொடரும் சூழ்ச்சி!!

வீசும் காற்றிலும்
வாசம் தன் வசம் வேண்டுமென
வீரம் பேசும்!!

நேசமோ உண்டு இவனிடம்
வேஷமும் உண்டு சிலரிடம் !
தேசங்கள் வேறுபட்டாலும்
சுவாசம் ஒன்றென பறைசாற்றும் ஆண் வாசம்!!

தேடும் இன்பமும்
தேடா துன்பமும்
மீண்டும் வேண்டாமென
நாளும் கதை பேசும் !!

வேறிடம் போக மனம்
- புகா பாசமும் உண்டு
சேரிடம் சிறப்பினை
சீராய் பரவும் குணமும் உண்டு!!

நூற்றாண்டு கடப்பினும்
நூறு விதிகள் போடும்
நூலிழையில் நூலகம்
நடத்தும் நெறியும் உண்டு !!

மழை

0 comments
மண்ணின் மனமும்
பெண்ணின் குணமும்
தென்னையின் வளமும்
விண்ணளவு சுரக்கும் பொன்னாம் !!

பசுமையின் சிறப்பும்
கருமையின் விரிவும்
பெருமையென கொணரும்
புதுமையென பொழியும் அழகாய்!!

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்
மக்களுக்கு உயிரூட்டும் உணவாய்
மனமும் குணமும்
மனதோடு நிறைந்திடும் இதமாய் !!

பழமையும் புதுமையும்
பரவசமாய் படர்ந்திடும் பதமாய்
பன்னீரூம் செழுநீரும்
விண்ணின் நீராகும் சிறப்பாய்!!

கானல் நீரும் காணா நீராகி
காதல் புரியும் காற்றாகி
கண் முன்னே சுரக்கும் உயிராகி
வெண் மேகம் பொழியும் அருவியாய் !!











Recent Posts

Recent comments

Followers